யோகி பாபு ஜோடியாக மனிஷா யாதவ்: சண்டிமுனி ஸ்டில்ஸ்!

யோகி பாபு ஜோடியாக மனிஷா யாதவ்: சண்டிமுனி ஸ்டில்ஸ்!
பதிவு செய்த நாள் வியாழன் 27, செப்டம்பர் 2018
நேரம் 10:15:16 PM (IST)

ஒரு குப்பைக் கதை’ படத்திற்கு பிறகு கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் மனிஷா யாதவ், அடுத்ததாக ‘சண்டி முனி’ என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். சிவம் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சண்டி முனி’ படத்தில் ஹீரோவாக நட்ராஜ் நடிக்க, ஹீரோயினாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். வில்லனாக ஸ்டண்ட் இயக்குநர் சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, ஆர்த்தி, வாசு விக்ரம், முத்துக்காளை, சூப்பர் குட் சுப்பிரமணி, கிரேன் மனோகர், அஞ்சலி தேவி, சீனியம்மாள், பாபு பாய், பூபதி, விசித்திரன், குள்ள செந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.Thoothukudi Business Directory