விக்ரம் பிரபுவின் இது என்ன மாயம் ஸ்டில்ஸ்

விக்ரம் பிரபுவின் இது என்ன மாயம் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் திங்கள் 13, ஏப்ரல் 2015
நேரம் 8:17:45 PM (IST)

தலைவா, சைவம் என அடுத்தடுத்த சறுக்கல்களைச் சந்தித்த இயக்குநர் விஜய், இப்போது விக்ரம் பிரபுவுடன் கை கோர்த்து களமிறங்கியுள்ள படம் இது என்ன மாயம். இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் இசை. சண்டமாருதம் படத்தைத் தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் விஜயிடம் கேட்டோம்.. இது காதல் சம்மந்தப்பட்ட படம்தான்.. காதல்ங்கிறது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அது யாருக்கு வருகிறது, அவர்களுக்கு அது எந்த கால கட்டத்தில் வருகிறது என்பது தான் காதலின் மகத்துவம். ஒருவருக்கு அது, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் பூக்கிற தருணம் இனிமையானது. அதைத்தான் இது என்ன மாயம் பிரதிபலிக்கும்.விரைவில் படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் படத்தின் பாடல் டீஸர் வெளிவந்துள்ளது.Thoothukudi Business Directory