மாஸ் லுக்கில் தமிழ் ஹீரோக்கள்

மாஸ் லுக்கில் தமிழ் ஹீரோக்கள்
பதிவு செய்த நாள் புதன் 4, மார்ச் 2015
நேரம் 8:51:38 PM (IST)

வெங்கட் பிரபு இயக்த்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் மாஸ். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ப்ரணிதா, சமுத்திரகனி, பார்த்திபன், மதுசூதன், ஸ்ரீராம், கருணாஸ், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை அஜித் பிறந்த நாளான மே 1-ம்தேதி உழைப்பாளர் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே மாஸ் படத்தின் ப்ர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப்பொழுது மாஸ் படத்தின் 2வது லுக் வெளியிட்டுள்ளனர். இந்த லுக்கை தமிழ் சினிமா பிரபலங்கள் பலருக்கும் வைத்து போட்டோக்களை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.



Thoothukudi Business Directory