சூர்யாவின் மாஸ் படத்தின் 2வது லுக்

சூர்யாவின் மாஸ் படத்தின் 2வது லுக்
பதிவு செய்த நாள் திங்கள் 2, மார்ச் 2015
நேரம் 8:32:33 PM (IST)

வெங்கட் பிரபு இயக்த்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் மாஸ். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ப்ரணிதா, சமுத்திரகனி, பார்த்திபன், மதுசூதன், ஸ்ரீராம், கருணாஸ், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை அஜித் பிறந்த நாளான மே 1-ம்தேதி உழைப்பாளர் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது சூர்யாவை வைத்து இயக்கி வரும் மாஸ் படம் அஜித் பிறந்த நாளில் வெளியாக இருப்பது, வெங்கட் பிரபுவுக்கும் அஜித்தும் உள்ள நட்பின் வெளிப்பாடாக இருப்பதுபோல் உள்ளது. ஏற்கனவே மாஸ் படத்தின் ப்ர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப்பொழுது மாஸ் படத்தின் 2வது லுக் வெளியிட்டுள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் அதை மற்றவர்களுக்கு சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்Thoothukudi Business Directory