சூப்பர்ஸ்டாரின் லிங்கா பட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

சூப்பர்ஸ்டாரின் லிங்கா பட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் திங்கள் 8, டிசம்பர் 2014
நேரம் 7:57:55 PM (IST)

ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா திரைப்படம் அவரது பிறந்தநாளான டிச்ம்பர் 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.லிங்கா திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குனர். கே.எஸ்.ரவிக்குமாரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்திருக்கும் படம் லிங்கா. அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கதாநாயகிகளாக இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில் லிங்கா படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகம் முழுக்க வெளியிடும் வேலைகளில் இறங்கிவிட்டனர். அமெரிக்காவில் மட்டும் லிங்கா படம் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறதாம். இதுவரை எந்த தமிழ்ப் படமும் இந்த அளவுக்கு அமெரிக்காவில் ரிலீஸ் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.Thoothukudi Business Directory