விமல், ப்ரியா ஆனந்த், சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

விமல், ப்ரியா ஆனந்த், சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
பதிவு செய்த நாள் செவ்வாய் 19, ஆகஸ்ட் 2014
நேரம் 8:55:26 PM (IST)

ஆர்.கண்ணன் இயக்கிவரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் நிலையில் உள்ளது. விமல். ப்ரியா ஆனந்த், சூரி நடித்துள்ள இந்தப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆடியோ ரிலீஸை வரும் ஆகஸ்ட்-29 ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளார்களாம். அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி என்பதால் இந்த இசைவெளியீட்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட இருக்க்கிறார்களாம். இந்த விழாவிற்கு திரையுலகின் முக்கிய பிரபலங்களை எல்லாம், குறிப்பாக படத்தின் டைட்டிலில் இரண்டு ராஜாக்கள் இடம்பெற்றுள்ளதால் அந்த பெயருக்கு தொடர்புடைய பிரபலங்களை அழைத்து விழாவை வித்தியாசமாக நடத்துவது என முடிவு செய்துள்ளார்களாம்.Thoothukudi Business Directory