சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட ஸ்டில்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் செவ்வாய் 19, ஆகஸ்ட் 2014
நேரம் 8:33:58 PM (IST)

லிங்கா படப்பிடிப்பு கே.எஸ்.ரவிக்குமாரின் வழக்கமான படங்களைவிட மிக வேகமாக நடந்து வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மாலை 5 மணி வரை எடுப்பவர் மற்றவர்களை மேலும் நான்கைந்து மணி நேரம் ட்ரில் வாங்குகிறார். படத்தில் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமும், நிகழ்காலமும் வருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம் சம்பந்தமான காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்தனர். கடந்த 8ஆ‌ம் தேதியோடு ஹைதராபாத் ஷெட்யூல் நிறைவு பெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இந்த ஷெட்யூ‌லில் டாக்கி போர்ஷனுடன் பாடல் காட்சி ஒன்றையும் எடுக்கின்றனர். ரவிக்குமார் எதிர்பார்த்ததைவிட முன்னதாக பாடல் டியூனை தந்துள்ளார் ரஹ்மான். அந்த உற்சாகத்தில் சென்னை ஷெட்யூல்‌லில் பாடல் காட்சியை படமாக்குவது என்று முடிவு செய்துள்ளனர். லிங்காவில் ரஜினியுடன் சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா, சந்தானம் நடிக்கின்றனர். ரஹ்மான் இசை, ரத்னவேல் ஒளிப்பதிவு. ராக்லைன் வெங்கடேஷ் படத்தை தயாரிக்கிறார்.Thoothukudi Business Directory