பைக் ரேஸ் பின்னணியில் இரும்புக்குதிரை

பைக் ரேஸ் பின்னணியில் இரும்புக்குதிரை
பதிவு செய்த நாள் செவ்வாய் 19, ஆகஸ்ட் 2014
நேரம் 8:09:44 PM (IST)

பைக் ரேஸ் பின்னணியில் எடுக்கப்பட்ட ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரிஸ்,தூம் போன்ற படங்கள் இந்தியாவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் தந்துள்ளது. இந்திய சினிமாவில் பைக் ரேஸ் வைத்து அதிக படங்கள் வந்ததில்லை என்று சொல்லலாம். அந்த குறையை அதர்வாவின் இரும்புக்குதிரை போக்கும் என்கிறார்கள். இப்படம் குறித்து அதர்வா கூறும்போது, இரும்புக்குதிரை தமிழ் சினிமாவில் மாறுபட்ட ஒரு பட‌மாக உருவாகியுள்ளது. இந்தப் படம் வித்தியாசமான ஒரு அனுபவத்தை தருவதோடு, பார்ப்பவர்களை வியக்கவும் வைக்கும் படமாக அமைந்துள்ளது என்கிறார். அறிமுக இயக்குனர் யுவராஜ் போஸ் இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.Thoothukudi Business Directory