இந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல நிறைவு விழா புகைப்பட தொகுப்பு..!

இந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல நிறைவு விழா புகைப்பட தொகுப்பு..!
பதிவு செய்த நாள் புதன் 25, செப்டம்பர் 2013
நேரம் 11:16:21 AM (IST)

இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையும் இணைந்து இந்திய சினிமா நூற்றாண்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கிவைத்தார். இந்திய சினிமா நூற்றாண்டின் நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு இந்திய சினிமாவில் நீண்ட கால சாதனை புரிந்த கலைஞர்களுக்கு நூற்றாண்டு விருதுகளை வழங்கினார். முதல் விருதை, முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவர் வழங்கினார். நீண்ட கால சாதனை புரிந்ததற்காக எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகை ஸ்ரீதேவி, இந்தி நடிகை ரேகா, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், நடிகை வைஜயந்திமாலா, டைரக்டர் கே.பாலசந்தர் உட்பட பலருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் சிவகுமார், விஜய், அஜீத், கார்த்தி, வெங்கடேஷ், சுதீப், சின்னி ஜெயந்த், நடிகைகள் நயன்தாரா, திரிஷா, பிரியங்கா திரிவேதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.Thoothukudi Business Directory