3டி தொழில்நுட்பத்தில் நான்காம் பிறை

3டி தொழில்நுட்பத்தில் நான்காம் பிறை
பதிவு செய்த நாள் செவ்வாய் 7, ஆகஸ்ட் 2012
நேரம் 8:40:23 PM (IST)

தமிழில் விக்ரம் நடித்து வெற்றி பெற்ற "காசி" படத்தின் இயக்குனர் வினயன் "நான்காம் பிறை" என்னும் புதிய படத்தை இயக்குகிறார். ஒவ்வொரு பிரேமிலும் 3டி எபெக்ட்டுடன் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பான திரைக்கதையுடன் ஒரு திரைப்படம் உருவாகிறது. அதற்கு "நான்காம் பிறை" என பெயரிட்டுள்ளனர். உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர் பிராம் ஸ்டோகர் எழுதிய டிராகுலா நாவல் கதையை மையமாக கொண்ட இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த படத்தில் புகழ் பெற்ற ஹாலிவூட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். 3டி படமான இதில் பிரபு,நாசர்,திலகன்,கஞ்சா கருப்பு, மனோபாலா நடிக்கின்றனர். புதுமுகம் ஆர்யன் நாயகனாகவும் சுதிர் டிராகுலா வேடத்திலும் நடிக்கின்றனர். மோனால் கஜ்ஜார், ஸ்றத்தா தாஸ், பிரியா மற்றும் ஸ்வேதா, பாபுபிரசாத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு ருமேனியா நாட்டில் உள்ள டிராகுலா மாளிகை பிரேன் கேஸ்டல் டிரான்சில்வேனியாவில் துவங்கி சென்னை ஹைதராபாத், புதுச்சேரி, கொச்சி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க தமிழல் 3டி படம் ஒன்று உண்டென்றால் அது இந்த படமாகத்தான் இருக்கும் என்கிறார் இயக்குனர் வினயன்.Thoothukudi Business Directory