பூக்கடையில் கதாநாயகியாக சமந்தா

பூக்கடையில் கதாநாயகியாக சமந்தா
பதிவு செய்த நாள் புதன் 25, ஜனவரி 2012
நேரம் 8:24:05 PM (IST)

இயக்குனர் மணிரத்தினம் அடுத்த படமான பூக்கடையில் சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த பார்த்திபன் மகள் கீர்த்தனா இப்படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் பேச்சு எழுந்தது. ஆனால் இவர்கள் யாருமே அப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இப்போது சமந்தா இப்படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க 45 நாட்கள் ஒதுக்கியிருக்கிறாராம். சமந்தா தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மூன்று மொழிகளில் தயாரிக்கப்படும் நீதானே என் பொன்வசந்தம் நடித்து வருகிறார். மூன்று மொழிகளிலும் சமந்தாவே நாயகியாக நடிக்கிறார். கௌதம் மேனன் படம் முடிந்த பிறகு கௌதம் உடன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. பெரிய இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து கமிட் ஆவதால், சமந்தா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.Thoothukudi Business Directory