விக்ரம் தீக்ஷாசேத் நடிக்கும் ராஜபாட்டை

விக்ரம் தீக்ஷாசேத் நடிக்கும் ராஜபாட்டை
பதிவு செய்த நாள் ஞாயிறு 9, அக்டோபர் 2011
நேரம் 6:13:57 PM (IST)

சுசீந்திரன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் படம் ராஜபாட்டை. இப்படத்தில் தெலுங்கு நடிகையான தீக்ஷா சேத் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அதனை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். இப்படத்தில் அனல் முருகன் என்ற கேரக்டரில், ஜிம் மாஸ்டர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டராக வருகிறார் விக்ரம். ஒரு பாடலுக்காக இவருடன் ஆட ஸ்ரேயா, ரீமா சென் ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.இந்த பாடல் ஜப்பானில் படமாக உள்ளது. வரும் டிசம்பரில் இப்படம் வெளியாக இருக்கிறது.Thoothukudi Business Directory