ஸ்ரீகாந்த் சோனியா அகர்வால் நடிக்கும் சதுரங்கம்

ஸ்ரீகாந்த் சோனியா அகர்வால் நடிக்கும் சதுரங்கம்
பதிவு செய்த நாள் ஞாயிறு 9, அக்டோபர் 2011
நேரம் 5:30:43 PM (IST)

சசி இயக்கத்தில் ரோஜாக் கூட்டம் படத்தின் மூலம் சாக்லேட் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீகாந்த் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசியின் பூ படம்தான் அவருக்கு பிரேக்காக அமைந்தது. தற்போது உண்மையாகவே ஸ்ரீகாந்தின் நிஜ இன்னிங்ஸ் தொடங்குகிறது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் த்ரி இடியட்ஸ் தமிழ் ரீமேக்கான நண்பனில் நடித்து முடித்திருக்கும் ஸ்ரீகாந்துக்கு, சசியைப் போலவே பார்த்தீபன் கனவு படத்தின் மூலம் மீண்டும் பிரேக் கொடுத்தவர் இயக்குனர் கரு.பழனியப்பன். இவரது இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடிப்பில் சதுரங்கம் என்ற படம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் படமாக்கப்பட்டது. தமிழ்சினிமாவின் நிஜ இதழியல் சினிமா என்று வருணிக்கப்பட்டு வந்த இந்த படம், பல காரணங்களால் வெளியாகவில்லை. ஆனால் தற்போது ஜனரஞ்சக இதழியல் படமாக கோ வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. கோ தந்த உற்சாகத்தில் தற்போது, சதுரங்கம் படத்தை பெரும் முயற்சி எடுத்து வெளியிட உள்ளனர். படத்தில் ஸ்ரீகாந்த், திசைகள் என்ற பத்திரிக்கையில் கிரைம் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கிறார்.Thoothukudi Business Directory