மலையாளக் கரையோரத்தில் அமலா பால்

மலையாளக் கரையோரத்தில் அமலா பால்
பதிவு செய்த நாள் ஞாயிறு 7, ஆகஸ்ட் 2011
நேரம் 9:14:05 PM (IST)

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் அமலா பால். தமிழில் வீரசேகரன் படம்தான் அமலா பாலுக்கு முதல் படம் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அதன்பின் நடித்த ‘சிந்து சமவெளி அவருக்கு விளம்பரத்தை மட்டுமே தந்தது. இயக்குநர் பிரபு சாலமனின் மைனா படமே அமலாவுக்கு புகழைத் தந்தது. அப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமுடன் தெய்வத் திருமகள் படத்தில் நடித்துள்ளார். மேலும், அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் , மாதவன், ஆர்யாவுடன் வேட்டை படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய மலையாளத் திரையுலகை மறக்காமல் உள்ளார் அமலா பால். தற்பொழுது தமிழைப் போலவே மலையாளத் திரையுலகிலும் பிஸியாகவுள்ளார். மலையாள இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ப்ருத்திராஜ் நடிக்கும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இது நம்மோட கத என்ற படத்திலும் நடித்துவருகிறார்.Thoothukudi Business Directory