ஸ்ரேயா ஜீவா நடிக்கும் ரவுத்ரம்

ஸ்ரேயா ஜீவா நடிக்கும் ரவுத்ரம்
பதிவு செய்த நாள் ஞாயிறு 8, மே 2011
நேரம் 10:05:46 PM (IST)

ஜீவாவுக்கான கதைகளை தேர்ந்தெடுப்பதில் அவரது தந்தை ஆர்.பி.சௌத்‌ரி அதிக கவனமாக இருக்கிறார். படத்தின் கதை அவருக்குப் பிடித்திருந்தால் ‌ஜீவாவின் கால்ஷீட் கிடைக்கும். ரொம்பப் பிடித்திருந்தால் தயா‌ரிப்பாளரே கிடைப்பார். ஆம், கதை ரொம்பப் பிடித்திருந்தால் சொந்தமாகவே படத்தை தயா‌ரிப்பார் சௌத்‌ரி. அறிமுக இயக்குனர் கோகுல் சௌத்‌ரியிடம் சொன்ன ஆ‌க்சன் கதை அவருக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. தனது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் படத்தை தயா‌ரிப்பதாகக் கூறி அதற்கான வேலைகளையும் தொடங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ‌‌‌ஜீவா ஜோடியாக நடிக்கப் போகிறவர் ஸ்ரேயா. இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.Thoothukudi Business Directory