விஜய் நடிக்கும் வேலாயுதம்

விஜய் நடிக்கும் வேலாயுதம்
பதிவு செய்த நாள் ஞாயிறு 1, மே 2011
நேரம் 5:12:21 PM (IST)

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிப்பில் மிக அதிக பொருட்செலவில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். பல கோடி முதலீட்டில் தயாராகும் இந்த படத்தை வெற்றிபட இயக்குனரான எம்.ராஜா இயக்கி வருகிறார். ஜெனிலியா, அன்ஸிகா. சரண்யா மோகன் மற்றும் சந்தானம், எம்.எஸ்பாஸ்கர், சத்யன், பாண்டியராஜன், சாயஜிஷின்டே ஆகியோர் சிறந்த கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக மும்பையில் இருந்து 14 வில்லன் நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை விஜய் ஆண்டனி. ஓளிப்பதிவு ப்ரியன். ஆஸ்கார் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் விஜய், பால்காரர் கதாபாத்திரத்திலும் சரண்யா மோகன் விஜயின் தங்கையாகவும் படத்தில் இடம் பெறுகிறார். ஜெனிலியா பத்திரிக்கையாளராகவும் அன்ஸிகா, விஜயை காதலிப்பவராகவும் வருகிறார். படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெறுகிறது. ஸ்டெண்ட் மாஸ்டர் அனல் அரசின் ஆறு ஆபத்தான சண்டை காட்சிகளில் விஜய் தூள் கிளப்புகிறார். வேலாயுதம், விஜயின் பிறந்த நாளான ஜீன் 22 தேதிவாக்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் பிரமாண்ட வசூலை தருகிற படமாக வேலாயுதம் இருக்கும்.Thoothukudi Business Directory