தனுஷ், கிருஷ்ணா, அனன்யா நடிக்கும் சீடன்!

தனுஷ், கிருஷ்ணா, அனன்யா நடிக்கும் சீடன்!
பதிவு செய்த நாள் ஞாயிறு 6, பிப்ரவரி 2011
நேரம் 11:46:48 AM (IST)

மித் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமித் மோகன் தயாரிக்கும் படம், ‘சீடன்’. தனுஷ், கிருஷ்ணா, அனன்யா நடிக்கின்றனர். சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். இப்படத்தில் நடித்தது குறித்து, நிருபர்களிடம் தனுஷ் கூறியதாவது: மலையாளத்தில் வந்த ‘நந்தனம்’ படத்தின் ரீமேக் இது. ஏற்கனவே சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் ‘திருடா திருடி’ படத்தில் நடித்தேன். இப்போது ‘சீடன்’ படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்துள்ளேன். இதில் நான் ஹீரோ இல்லை. கிருஷ்ணா ஹீரோ, அனன்யா ஹீரோயின். படம் முழுவதும் வருவேன். 25 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளேன். 40 நிமிடம் என் காட்சிகள் இடம்பெறும். பாடல் கூட இருக்கிறது. இதில் முதல்முறையாக சமையல்காரன் வேடத்தில் நடிக்கிறேன். இப்படத்தை பெண்களுக்கு குறிப்பாக, என் அம்மா, மனைவி ஐஸ்வர்யா, லதாம்மா போன்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். அனைவரையும் கவரும் வகையில் ஒவ்வொரு காட்சியும் ஜனரஞ்சமாக இருக்கும். இவ்வாறு தனுஷ் கூறினார்.தனுஷ் அனன்யா சீடன்Thoothukudi Business Directory