ஜீவா திவ்யா ஸ்பந்தனா நடிக்கும் சிங்கம் புலி.

ஜீவா திவ்யா ஸ்பந்தனா நடிக்கும் சிங்கம் புலி.
பதிவு செய்த நாள் வெள்ளி 3, டிசம்பர் 2010
நேரம் 8:42:15 PM (IST)

சிங்கம் புலி. ‌‌ஜீவா முதல் முறை இரட்டை வேடம் போடும் படம். மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டுகிற சிவாவாகவும், ஜாலியான வக்கீல் அசோக்காகவும் இரண்டு வேடங்களிலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கெட்டப்பில் அதிக வித்தியாசம் இல்லாததால் ஒரே நாளில் சிவா, அசோக் இரண்டு பேராகவும் மாறி மாறி நடித்து அசத்துகிறாராம். படத்தில் ‌‌ஜீவாவுக்கு ஜோடி திவ்யா ஸ்பந்தனா. திவ்யா சிங்கத்துக்கு ஜோடியா? புலிக்கு ஜோடியா? யாராக இருந்தால் என்ன. ‌ஜில்லுன்னு டூயட் இருந்தால் போதாதா? அதற்காகவே மெனக்கெட்டு லொகேஷன் தேடி வருகிறார்கள். எஸ், நீங்க நினைக்கிற மாதி‌ரி வெளிநாட்டில்தான். ஐரோப்பாவிலேயே கேமரா கண் படாத இடம்தான் அவர்கள் இலக்கு. சிங்கம் புலியை எஸ்.எஸ்.வாசன், எஸ்.பார்த்திபன் இணைந்து தயா‌ரிக்கிறார்கள். பணத்தை பற்றி கவலைப்படாமல் கேட்டதை செய்து கொடுப்பதால் இயக்குனர் சாய்ரமணியும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். "‌ஜீவாவின் நடிப்புத் திறமையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும்" என்கிறார்.Thoothukudi Business Directory