தனுஷ் - ஜெனிலியாவின் உத்தம புத்திரன்!

தனுஷ் - ஜெனிலியாவின் உத்தம புத்திரன்!
பதிவு செய்த நாள் ஞாயிறு 5, செப்டம்பர் 2010
நேரம் 7:39:55 PM (IST)

மூன்றாவது முறையாக உத்தம புத்திரன் தலைப்பில் தமிழில் படம் தயாராகிறது. தனுஷ் - ஜெனிலியா ஜோடியாக நடிக்கின்றனர். 70 வருடங்களுக்கு முன்பு பி.யு.சின்னப்பா கதாநாயகனாக நடித்து, முதன்முதலாக 'உத்தம புத்திரன்' என்ற பெயரில் ஒரு படம் திரைக்கு வந்தது. அதையடுத்து பல வருடங்களுக்குப்பின், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து, உத்தம புத்திரன் என்ற பெயரில் மீண்டும் ஒரு படம் வெளியானது. இப்போது மூன்றாவது முறையாக, உத்தம புத்திரன் என்ற பெயரில் படம் தயாராகிறது. தெலுங்கு, கன்னடம் ஆகிய 2 மொழிகளிலும் வெற்றிபெற்ற ரெடி என்ற படமே உத்தம புத்திரனாக தமிழில் தயாராகிறது. தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெனிலியா கதா நாயகியாக நடிக்கிறார். மித்ரன் கே.ஜவகர் இயக்குகிறார் இந்தப் படத்தை. இவர், தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய படங்களை இயக்கியவர். 3-வது முறையாக இவரும், தனுசும் இந்த படத்தில் இணைகிறார்கள். இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல் இயக்குநர் பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிப்பது. விவேக், கருணாஸ், ஆசிஷ் வித்யார்த்தி, மயில்சாமி, ஆர்.சுந்தர்ராஜன், விஜய்பாபு, சீதா, உமா பத்மனாபன், ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். பாலாஜி ஸ்டூடியோஸ் சார்பில் மோகன் அப்பாராவ், ரமேஷ் தாண்ட்ரா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.Thoothukudi Business Directory