ஜீவா டாப்சி நடிக்கும் வந்தான் வென்றான்

ஜீவா டாப்சி நடிக்கும் வந்தான் வென்றான்
பதிவு செய்த நாள் ஞாயிறு 29, ஆகஸ்ட் 2010
நேரம் 5:08:42 PM (IST)

நான் கடவுள் படத்தை தயாரித்த கே.எஸ்.சீனிவாசனின் வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் வந்தான் வென்றான். இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார்.ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வரும் டாப்சி ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம் நடிக்க மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் கதை, திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்குகிறார்.தனக்கென பயணத்தை தீர்மானித்து விட்டு செல்லும் ஒருவனுக்கு ஏற்படும் தடைகளும், அதை அவன் வென்று அடைவதுமே கதை என்றார் இயக்குனர்.Thoothukudi Business Directory