எந்திரன் நிறைவு பாடல் வெளியீடு ரஜினிகாந்த்,ஐஸ்வர்யாராய்

எந்திரன் நிறைவு பாடல் வெளியீடு ரஜினிகாந்த்,ஐஸ்வர்யாராய்
பதிவு செய்த நாள் ஞாயிறு 18, ஜூலை 2010
நேரம் 5:19:13 PM (IST)

இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள மிகப்பிரமாண்டமான படம் ‘எந்திரன்‘. பெரும் பொருட்செலவில் இதுவரை இந்தியப்பட உலகில் யாரும் உருவாக்காத அளவுக்கு, படவுலகமே வியப்பின் உச்சிக்கே செல்லும் அளவுக்கு, மிகப்பிரமாண்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு, 2 ஆண்டுகளாக இடைவிடாமல் நடந்து, கடந்த 7&ம் தேதி நிறைவடைந்தது.இரவு, பகல் பாராமல் உழைத்த அத்தனை பேரும், பிரமாண்ட படப்பிடிப்பு முடிந்த அன்று இரவு பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினர். இதில், ரஜினிகாந்த், ஷங்கர், ஐஸ்வர்யா ராய் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.Thoothukudi Business Directory