தண்ணீரில் தத்தளிக்கும் தூத்துக்குடி

தண்ணீரில் தத்தளிக்கும் தூத்துக்குடி
பதிவு செய்த நாள் திங்கள் 23, நவம்பர் 2015
நேரம் 8:41:44 PM (IST)

தூத்துக்குடியில் இன்று அதிகாலை மறவன்மடம் அந்தோணியார்புரம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. அந்த வெள்ளத்தில் சிக்கிய அந்தோணியார்புரம் மக்கள் பரிதவிப்புக்கு உள்ளானார்கள். தூத்துக்குடி ‍திருநெல்வேலி நெடுஞ்சாலை வெட்டப்பட்டு தண்ணீர் கோரம்பள்ளம் பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது. அந்தோணியார்புரத்தில் உள்ள மழைவெள்ளம் சர்வீச் ரோடு வழியாக மாதவன் நகர், சோரீஸ்புரம், துரைக்கனி நகர் ஆகிய பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஐ.டி.ஐ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட தொழில் மையம் ஆகிய அலுவலகங்களிலும் மழை வெள்ளம் புகுந்தது.Thoothukudi Business Directory