தூத்துக்குடி பனிமய மாதா பேராலய கொடியேற்றம்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய கொடியேற்றம்
பதிவு செய்த நாள் திங்கள் 26, ஜூலை 2010
நேரம் 11:42:39 AM (IST)

உலக பிரசித்திப்பெற்ற, கிறிஸ்தவ தேவாலயங்களில் மிகவும் பழமை வாய்ந்த பேராலயமான தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 6.30 மணிக்கு, திருப்பலியும், 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் 9.03 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து உலக சமாதானத்தை வலியுறுத்தி வெள்ளை நிற புறாக்கள் பறக்கவிடப்பட்டன. (படங்கள்:இருதயராஜ்)Thoothukudi Business Directory