தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.18 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்கம்

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.18 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்கம்
பதிவு செய்த நாள் வியாழன் 1, ஜூலை 2010
நேரம் 7:54:53 PM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.18 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை மத்திய கப்பல் துறை செயலாளர் மோகன்தாஸ் துவக்கி வைத்தார். துறைமுகத்தின் பாதுகாப்பை பலப்படுத்த 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் துறைமுகத்தின் முக்கிய பகுதிகளில் கேமரா மூலம் கண்காணிக்கும் கருவிகள் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை அவர் திறந்து வைத்தார். இதுபோல் ரூ.12.19 கோடியில் நிறுவப்பட்ட 10 டன் மற்றும் 6 டன் கொள்ளளவு கொண்ட பளு தூக்கியையும் இயக்கி வைத்தார். இதன்மூலம் உற்பத்தி திறன் வருடத்திற்கு 1.9 மில்லியன் டன் உயரும். (புகைப்படங்கள்:இருதயராஜ்)Thoothukudi Business Directory