» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!!!

ஞாயிறு 24, மார்ச் 2024 1:16:29 PM (IST)



கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் 1990ம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்த மாணவர்கள், அப்பொழுது அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.

35 ஆண்டுகளுக்குப் பின்பு மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை சந்தித்து படிக்கும்போது நடைபெற்ற பல்வேறு விஷயங்களை, மறக்க முடியாத ஞாபகங்களை பகிர்ந்து கொண்டனர். . இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். பள்ளியின் பணி நிறைவு பெற்ற தேசிய நல்லாசிரியை குமுதம் , பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் முத்தையா , ஆனந்தசெல்வி, பாத்திமாஜெயமேரி, ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவி செல்வக்கனி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், தற்போது பணிபுரியும் ஆசிரியைகள் விஜய பொன்ராணி,செல்வி, டோரதி செல்வின், முத்துச்செல்வி, அருள் காந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள்மாணவர்கள் ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தாங்கள் படிக்கும் போது நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை நிகழ்வுகளை நினைவு படுத்தினர். முடிவில் முன்னாள் மாணவி ஹெலன் பிருந்தா நன்றியுரை ஆற்றினர். 

முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு சென்றும், தங்களின் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தினர். இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் கணேஷ்குமார், ரவி, சீனிவாசன், செல்வமுத்து, ரமேஷ், திருஞானம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory