» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டி பள்ளியில் சர்வதேச காடுகள் தின ஓவியக் கண்காட்சி

வியாழன் 21, மார்ச் 2024 8:38:31 PM (IST)



கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. 

2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச காடுகள் தினத்தின் கருப்பொருள்: ‘காடுகள் மற்றும் புதுமை’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது, இது ஒரு சிறந்த உலகத்திற்கான புதிய தீர்வுகள். காடழிப்புக்கு எதிரான போருக்கு புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தேவை என்பதை உணர்ந்து கொள்வதற்கு மட்டுமல்ல நடைமுறைப்படுத்துவதற்குமான ஒன்று. 

சர்வதேச சர்வதேச வன நாளான இன்று இதனை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, காட்டுத் தீயைத் தடுப்பதிலும், அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பதிலும் பொதுமக்களின் பங்கு குறித்து பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் விளக்கப்பட்டது. இந்நிகழ்சிக்கு பள்ளி செயற்குழு உறுப்பினர் தாளையப்பன் தலைமை வகித்தார். பள்ளி செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார்.

சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காடுகள் மற்றும் மரங்களின் முக்கியத்துவத்தை சித்தரிக்கும் ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தனர். ஓவியக் கண்காட்சியை தூத்துக்குடி கோட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்து ஒவ்வொரு மாணவரும் மரம் வளர்ப்பதற்கு உண்டான வாய்ப்பு இருந்தால் தங்கள் வீட்டின் அருகே ஒரு செடியை நட்டு அந்த செடியை மூன்று வருடங்கள் தொடர்ந்து பராமரித்து வந்தால் மட்டுமே அது மரமாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என்பதைக் கூறி மரம் வளர்ப்பதின் அவசியத்தையும் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் காற்று மிக முக்கியமானது அதை உற்பத்தி செய்யும் மரங்களை அதிகப்படியாக வளர்ப்போம், பாதுகாப்போம் 

மேலும் நிலையான வன மேலாண்மை மற்றும் காடுகளை வளர்ப்பதற்கான புதுமைகளின் அடிப்படையான மைல்கல் புதுமையான சட்டங்கள், நிலப்பரப்புகள் அல்லது காடுகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், சமூக கண்டுபிடிப்புகள், மீண்டும் காடுகளை வளர்ப்பதற்கான புதுமை போன்ற அரசின் புதுமைகளை கையாள்வதில் அனைவரும் முனைப்பு காட்ட வேண்டும் என்று சிறப்புரையாற்றி ஓவியக் கண்காட்சியில் பங்குபெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி பாராட்டினார்.

வனவர் கேசவன் மற்றும் ஓய்வு பெற்ற முதுகலை வேளாண்துறை ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் காடுகள் உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளன. சுமார் 1.6 பில்லியன் மக்கள், 2000க்கும் மேற்பட்ட பழங்குடி கலாச்சாரங்கள் உட்பட, காடுகளை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளனர் என்று கூறி தங்கள் வாழ்த்துரையை வழங்கினர்.

ஆர்ட் அண்ட் சயின்ஸ் கிளப் ஓவிய ஆசிரியர் கனகராணி நன்றி கூறினார். சமூக அறிவியல் மற்றும் கணினி அறிவியல் துறை ஆசிரியர்கள் மகேஸ்வரி காளீஸ்வரி உட்பட இருபால் ஆசிரியப் பெருமக்கள், அலுவலகப் பணியாளர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஓவிய கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.


மக்கள் கருத்து

G.SURESHKUMARMar 22, 2024 - 05:35:36 AM | Posted IP 172.7*****

மிக நன்று! நல்வாழ்த்துகள்! வரம் தரும் மரங்களை பாதுகாப்பது மிக அவசியம்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory