» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டி காமராஜ் பள்ளியில் இரு பெரும் விழா!
வியாழன் 21, மார்ச் 2024 10:47:54 AM (IST)
கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலைகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் மேல்நிலைப் பள்ளியின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் உறவின் முறைக்கு சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலைகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதை முன்னிட்டு பள்ளியின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனி செல்வம் வழிகாட்டுதலின்படி கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உபதலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
சங்க பொருளாளர் சுரேஷ்குமார் உறுப்பினர் ராஜேந்திரபிரசாத், அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி பொருளாளர் ரத்தினராஜா, உறுப்பினர்கள் தாழையப்பன், பால்ராஜ், மனோகரன், செல்வம், தங்கமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி முதல்வர் டாக்டர் பிரபு அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் பிரபகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, சுகாதாரம், குழந்தைகளின் பழக்கவழக்கங்கள், தூய்மைச் செயல்பாடு, கல்வி முன்னேற்றம், குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு போன்ற பல்வேறு முக்கிய குறிப்புகளை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் எடுத்துரைத்தனர்.
பின்னர் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 78க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பட்டங்களையும் வழங்கினர். இதுபோல் கல்வியிலும், பல்வேறு திறன் சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும், வருகை பதிவேட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பள்ளி அன்னையர் குழு பெற்றோர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
நகராட்சியின் சார்பாக பட்டம் பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் நினைவு பரிசினை கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கமலா அவர்களால் வழங்கப்பட்டன. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை சிறப்பு விருந்தினர்களும், உறவின்முறை பெரியோர்களும், பெற்றோர்களும் கண்டு ரசித்தனர்.
பள்ளியின் மாணவர்கள் முன்னேற்றத்திற்கு முனைப்போடு கல்வி கற்பிக்கும் இருபால் ஆசிரியர் பெருமக்களுக்கும் சிறந்த முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற இதர பணியாளர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. யுகேஜி ஆசிரியர்கள் ஐஸ்வர்யம், அன்னலட்சுமி, முருகேஸ்வரி உட்பட இருபால் ஆசிரியர்களும் அலுவலகப் பணியாளர்களும் விழா நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.