» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பாரதியார் வித்யாலயம் பள்ளியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 22, பிப்ரவரி 2024 4:43:13 PM (IST)
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி,வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், வேலை வாய்ப்புள்ள படிப்புகள் போன்றவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் பேச்சியம்மாள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலத்தில் தங்கள் கல்வி சான்றிதழ்களை பதிவு செய்வது, உயர்கல்வி, பணியிட வாய்ப்புகள், அயல்நாட்டு வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், கல்விக் கடன், தொழில்முனைவோர் கடன் பெறுதல் பற்றியும் தெளிவாக விளக்கினார்.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரமோகன் தங்கள் அலுவலகத்தில் நடைபெறும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி குறித்து விளக்கினார். முன்னதாக முதுகலை ஆசிரியை மரகதவள்ளி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக முதுகலை ஆசிரியை அங்காளஈஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார்.