» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாகலாபுரம் எஸ்.ஏ.என்.மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

சனி 20, ஜூலை 2024 11:59:03 AM (IST)



நாகலாபுரம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள், 100% தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, கல்வி உதவித் தொகை வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா, நாகலாபுரம்,பள்ளிவாசல் தெரு நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் கல்வி வளர்ச்சி நாள், 100% தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, கல்வி உதவித் தொகை வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

பெருந்தலைவர் காமராசர் பிறந்த தினத்தை "கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. உறவின்முறைத் தலைவர் காசிராஜன் நாடார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காமராசரின் திருவுருவச் சிலைக்கு உறவின்முறைச் செயலர் பாஸ்கர், பொருளாளர் வேல்முருகன் நிர்வாகிகள் செல்ல மாரியப்பன், K. சங்கரலிங்க பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பள்ளி நிர்வாகக்குழு தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி வரவேற்புரை நிகழ்த்த, செயலர் பால்பாண்டியன் முக்கிய உரையாற்றினார். 

கல்வி வளர்ச்சி நாள் கூட்டத்தில் விருதுநகர் காமராசர் பொறியியல் கல்லூரி மேனாள் செயலர் மகேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். பள்ளியின் முதுகலை வேதியியல் ஆசிரியர் கௌதமன் சிறப்புரை நிகழ்த்தினார்.. மோகனதர்ஷினி, இளைய ராகவன், வினோதினி, முருக வேணி, சந்தோஷ், பாலசிவன் ஆகிய மாணவர்கள் பெருந்தலைவர் பற்றி தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உரையாற்றினர். விழா இறுதியில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொருளாதாரத்தில் நலிந்த மாணவ, மாணவியர் 16 பேருக்கு பள்ளிச் செயலர் பால்பாண்டியன் கல்வி உதவித் தொகை வழங்கினார்.

பள்ளி புரவலர் நிதி, மேனாள் முதுகலை ஆசிரியர் குணசீலன் வழங்கினார். தொடர்ந்து சென்ற மேல்நிலை பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்கள் ஆறுமுகச்சாமி, மோணிகண்டராஜன், கௌதம், ஞானசேகர், குணசேகரன், சாந்தி ஆகியோருக்கு பாராட்டும், பொன்னாடையும் வழங்கப் பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவியருக்கும் இனிப்பும், நோட்டுப் புத்தகங்களும் டபில்யூ. பி.ஏ.எஸ்.படிப்பக நிர்வாகிகளால் வழங்கப்பட்டன்.பிறந்தநாளை யொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன. 

வெற்றி பெற்றோருக்கு, படிப்பக மற்றும் காமராசர் இளைஞர் மன்றத்தினர் பரிசுகள் வழங்கினர். விழா முடிவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. இறுதியாக, "காமராசர் புகழ் நிலைத்து நிற்க அரசியல் பணியா? சமுதாயப் பணியா" என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. ஆங்கில முதுகலை ஆசிரியர் ஜான் ஸ்டேனி நன்றி கூறினார். அரசியல் அறிவியல் ஆசிரியர் குணசேகரன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory