» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மர்காஷிஸ் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதி வண்டிகள் வழங்கும் விழா!
புதன் 6, டிசம்பர் 2023 7:43:03 PM (IST)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற் றது. தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை தாங்கினார். தொழிற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி கலந்து கொண்டு 168 மாணவர்களுக்கு மிதி வண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகு மார்,நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், அதிசயமணி, சாமுவேல்,லிடியா பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர். முதுகலை விலங்கியல் ஆசிரியர் இமானுவேல் நன்றி கூறினார். தொழிற் கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.