» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

புதன் 6, டிசம்பர் 2023 7:39:53 PM (IST)நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து  கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். கல்லூரி தாளாளர் செல்வின் வரவேற்றார். மாணவிகள் வேதபாடம் வாசித்து, சிறப்பு பாடல்கள் பாடினர். 

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல், ஒய்வு பெற்ற ஆசிரியை விஜேந்திரா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆசிரியை சுவீட்லின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக செவிலியர் பட்டயப் பயிற்சி தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கார்த்திகாவுக்கும்,வேதாகம தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தூய யோவான் பேராலய சபை ஊழியர்கள் ஜெபராஜ் சாமுவேல், ஜெசு மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி இயக்குனர் பேரா.ஜெயசந்திரன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory