» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் தொடக்க விழா

புதன் 23, நவம்பர் 2022 12:46:38 PM (IST)தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடி  கிரேஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் மாணவர்கள் சங்கம் புதிதாக துவங்கப்பட்டது. சங்கத்தின் தலைவராக முன்னாள் மாணவர் விக்னேஷ்வரன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியர் ஜாய் சுகந்திபாய், துணை செயலாளராக முன்னாள் மாணவர் ரஞ்சித் குமார் தேர்வு செய்யப்பட்டனர். 

தேர்வு செய்யப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சான்றிதழ் வழங்கினார். மேலும் கல்லூரி தலைவர் ஜோஷ்வா, துணை தலைவர் ஸ்டீபன், செயலர் ராஜ்கமல் பெட்ரோ, கல்லூரி முதல்வர் ரிச்சர்ட், கல்லூரி யின் ஆட்சிக்குழு உறுப்பினர் வினோத், ராஜசேகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory