» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முப்பெரும் விழா!
வெள்ளி 18, நவம்பர் 2022 10:08:23 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் ஆச்சி போர் டிகோ நுழைவு வாயில் திறப்பு விழா, ரெவரன்ட் பிச்சமுத்து மேரி பிச்சமுத்து நினைவு ஆய்வக அறை திறப்பு விழா ரூ37லட்சம் மதிப்பில் கல்லூரி மேல் படிக்கட்டு மற்றும் அறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர்பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை வகித்தார். திருமண்டல உபதலைவர் தமிழ்செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் வரவேற்றார். திருமண்டல பிரதமப் பேராயரின் ஆணையாளர் பேராயர் தீமோத்தேயு ரவீந் தர் ஆச்சி போர்டிகோ நுழை வு வாயில் பிச்சமுத்து,மேரி பிச்சமுத்து நினைவு ஆய்வ கஅறையை திறந்து வைத் தார். தொடர்ந்து கல்லூரி மேல்படிக்கட்டு மற்றும் அறைகள் கட்டுவதற்கும் ஆணையாளர் தீமோத்தேயு அடிக்கல் நாட்டினார். முன் னாள் எம்பி ஏ.டி.கே.ஜெயசீ லன்,ஆச்சி மசாலா உரிமையாளர் பத்மசிங் ஐசக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில் திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், தெல்மா பத்மசிங், தூய யோவான் பேராலய தலைமைகுரு மர்கா ஷிஸ் டேவிட், குருமார்கள் செல்வகுமார், சாம், பாஸ்க ரன், ஜெயராஜ் அன்னபாக் கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஜாண்சன், மர்கா ஷிஸ் கல்லூரி முதல்வர் குளோரியம் அருள்ராஜ், மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சுதாகர், தொழிலதிபர் ஜெயபிர காஷ் தூயயோவான் பெண் கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந்தகுமாரி,
தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் ராஜசேகர், கைத்தொழில் பாடசாலை தாளாளர் எட்வர்ட்,முதல்வர் ஸ்டீபன், மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி தாளா ளர் செல்வின், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் செல்வின், பில்லிகிரஹாம், நாசரேத் பேரூராட்சி துணை தலைவர் அருண்சாமுவேல் (எ) தம்பு, கிராம அலுவலர் முத்துராஜ், முன்னாள் சேகர பொருளாளர் மர்காஷிஸ், நாசரேத் ஒய்எம்சிஏ தலை வர் எபனேசர், முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தின குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ, மா ணவிகள் கலந்து கொண்ட னர்.கல்லூரி முதல்வர் சோபியா செல்வராணி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:44:38 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)
