» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மீன் வகை பாட்டியலாளர்களின் ஊக்குவிப்பு தினம்

செவ்வாய் 22, மார்ச் 2022 10:35:59 AM (IST)தூத்துக்குடி  மீன்வளக் கல்லூரியில் மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறை சார்பில் மீன்வகை பாட்டியலாளர்களின் ஊக்குவிப்பு தினம் நடைபெற்றது. 

மீன் இனங்களைப் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், அவற்றை காத்திட நாம் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டிய வழிமுறைகள், மீன் வகைபாட்டியல் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி  மீன்வளக் கல்லூரியில் மீன்வகை பாட்டியலாளர்களின் ஊக்குவிப்பு தினம் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர்(பொ) இரா.சாந்தகுமார், தலைமையுரை வழங்கி சிறப்பித்தார். மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறைத் தலைவர் உதவிப் பேராசிரியர்(பொ) ரா.துரைராஜா வரவேற்புரை வழங்கினார். 

விழாவில் மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், முதுநிலை விஞ்ஞாணி இரா.சரவணன், கடல்வாழ் உயிரினங்களில் புறக்கணிக்கப்பட்ட நீர்வாழ் உயிரினங்களின் வகைப்பாட்டியலின் முக்கியத்துவம், தான் மேற்கொண்ட பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளை மற்றும் முடிவுகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிறைவாக உதவிபேராசிரியர் சுதன நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள், துறைத் தலைவர்கள, கல்லூரி ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory