» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வஉசி கல்லூரியில் இணையவழி குற்றத் தடுப்பு முகாம்

சனி 19, மார்ச் 2022 8:00:37 AM (IST)

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் ஏபிசிவி சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தலைமை வகித்தாா். 

சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், தில்லியில் உள்ள தேசிய இணையவழி பாதுகாப்பு அமைப்பின் இயக்குநா் காளிராஜ் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். இதில், இணையவழி குற்றங்களில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து மீள்வதற்கான சட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory