» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா

புதன் 12, ஜனவரி 2022 5:23:09 PM (IST)தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். 

தொழிற்கல்வி ஆசிரியர் கல்யாணக்குமார் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, இளைஞருக்கு அவர் தந்த தன்னம்பிக்கை கருத்துக்களை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள் பயிற்சி ஆசிரியைகள் கலந்துகொண்டனர். நிறைவாக முதுகலை ஆசிரியர் பாலசுந்தர கணபதி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory