» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாநில அளவிலான ஓவிய போட்டி : கொங்கராயகுறிச்சி பள்ளி மாணவர்கள் வெற்றி

திங்கள் 18, பிப்ரவரி 2019 7:41:02 PM (IST)
மாநில அளவிலான ஓவிய போட்டியில் கொங்கராயகுறிச்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

மாநில அளவில் ஒஷோ கம்யூனிகேஷன் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு டிரா கிட்ஸ் 2018-19 என்ற தலைப்பில் ஓவிய போட்டியை நடத்தியது. இப்போட்டியில் பங்கேற்ற கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.மாநில அளவிலான ஓவிய போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. 

விழாவிற்கு பள்ளி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். ஆசிரியை-ஆசிரியர்கள் சண்முகவேல், ராமன், ரத்தினசாமி, பிச்சம்மாள், செல்வபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் பால்ராஜ் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.இதில், பள்ளி ஆசிரியைகள் எஸ்தர்சாந்தி, இசக்கியம்மாள் மற்றும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

PARTHIPANFeb 19, 2019 - 03:33:00 PM | Posted IP 172.6*****

சூப்பர் THANKS

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory