» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில் ரத்ததான முகாம்

புதன் 19, டிசம்பர் 2018 4:09:47 PM (IST)தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்கள் 54 மற்றும் 56ன் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்தவர்களை திட்ட அதிகாரி ஆ.தேவராஜ் வரவேற்றார்.  கல்லூரி முதல்வர் து.நாகராஜன் தலைமையுரை யாற்றினார். அவர்தம் தலையுரையில் ரத்ததானம் பல உயிர்களை காக்கும் என்ற நிலை நீங்கி இன்று உடல் உறுப்புதானம் என்பது இன்றைய சூழலில் அத்யாவசியமான ஒன்றாக விளங்குவதையும் விளக்கினார்.  ஒவ்வொரு மனிதரும் 90 நாட்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம் எனவும் கூறினார். பெண்கள் காலை உணவினை தவறாது உட்கொள்வதால் அவர்களது அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலும் என்பதை தெளிவுபடுத்தினார்.  

தூத்துக்குடி மாவட்ட ரத்த வங்கி மருத்துவர் சாந்தி முன்னிலையில் 50 மாணவ, மாணவியர்கள் ரத்ததானம் வழங்கினர்.   சமூக சேவகர் செந்தில் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார். நாட்டுநலப்பணித் திட்ட அதிகாரி பா.பொன்னுத்தாய் நன்றியுரையாற்றினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்.54 மற்றும் 56ன் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory