» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி பிஎம்சி பள்ளி என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம்

வியாழன் 1, நவம்பர் 2018 10:20:15 AM (IST)தூத்துக்குடி பிஎம்சி மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் TNDTA தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. 

தூத்துக்குடி பிஎம்சி மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மறவன்மடம் பஞ்சாயத்து, இராமநாச்சியார்புரம் கிராமம் TNDTA தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் சேகரகுரு அகஸ்டின் ஆசியுரை வழங்கினார். பிஎம்சி பள்ளிகளின் முதன்மை நிர்வாகி  ஜோசப் ஜான் கென்னடி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை பி. ராஜவல்லி வரவேற்புரை வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் இரா. சுந்தர்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட என்.எஸ்.எஸ் தொடர்பு அலுவலர் இரா. கள்ளாண்ட பெருமாள் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். 

முகாம் நாட்களில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழா, பிளாஸ்டிக் ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் நடுதல், சமுதாய சீர்திருத்த மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மகாத்மா காந்தி 150வது பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடும் விதமாக முகாம் நடைபெற்ற இராமநாச்சியார்புரம் கிராம மக்களுக்கு எம்பள்ளியின் தலைமையாசிரியை பி. ராஜவல்லி மற்றும் உதவித்தலைமை ஆசிரியை ரமா தலைமையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிஎம்சி மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெ. அந்தோணி செல்வகுமார், உதவி ஆசிரியர் லூர்துமணி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory