» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
திங்கள் 25, நவம்பர் 2019 5:47:03 PM (IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நவம்பர் 12 ஆம் தேதி வெளியிட்டது. விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது.
தேர்வு நடந்த நாளில் இருந்து 72 நாட்களில் தரவரிசைப்படுத்தி தேர்வு முடிவுகளை குறைவான நாட்களில் வெளியிட்டிருந்தது தேர்வாணைய வரலாற்றில் இது முதன்முறை ஆகும். இதற்கு முன்பு 105 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள்: தோ்வுத் தேதிகள் அறிவிப்பு
சனி 13, பிப்ரவரி 2021 11:28:56 AM (IST)

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
செவ்வாய் 2, பிப்ரவரி 2021 3:08:59 PM (IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவுரைகள் : தேர்வாணையம் அறிவிப்பு
புதன் 30, டிசம்பர் 2020 4:54:34 PM (IST)

டிஎன்பிஎஸ்சி 26-ஆவது தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு
செவ்வாய் 14, ஏப்ரல் 2020 12:36:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2020 8:32:19 AM (IST)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்
சனி 8, பிப்ரவரி 2020 8:42:43 AM (IST)
