» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
குரூப் 1 தேர்வுத் தேதி அறிவிப்பு: ஏப்ரல் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 28, மார்ச் 2024 11:46:24 AM (IST)
ஜூலை 13-ஆம் தேதி நடைபெறும் குரூப் 1 எழுத்துத் தேர்வுக்கு ஏப்ரல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
காலியாகவுள்ள 90 துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 13-ஆம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புவோர் இன்று(மார்ச் 28) முதல் ஏப்ரல் 27 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.