» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
இந்திய அஞ்சல்துறை வங்கியில் 47 பணி இடங்கள்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 28, மார்ச் 2024 11:11:06 AM (IST)
இந்திய அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் அஞ்சல்துறை வங்கியில் காலியாக உள்ள 47 நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசுக்கு சொந்தமான நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வீட்டின் வாசலுக்கே தகவல் தொடர்புகளை கொண்டு செல்லும் இந்திய அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் அஞ்சல்துறை வங்கியில் காலியாக உள்ள 47 நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். IPPB/CO/HR/RECT./2023-24/06 (15/03/2024)
பணி: Executive
காலியிடங்கள்: 47
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 1.3.2024 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், விற்பனை, சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்ப்படுவர். தேவைப்படும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வு தொடர்பான் அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150. இதர பிரிவினர்களுக்கு ரூ.750. கட்டணத்தை ஆன்லைனில் முறையில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.ippbonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 5.4.2024 ஆகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)

தமிழக அரசு துறைகளில் 645 இடங்கள்: ஆக.13வரை விண்ணப்பிக்கலாம்!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:02:04 PM (IST)



TvigneshpandianApr 27, 2024 - 10:04:12 PM | Posted IP 162.1*****