» சினிமா » செய்திகள்

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

சனி 30, மார்ச் 2024 10:10:23 AM (IST)

பொல்லாதவன், காக்க காக்க உட்பட பல படங்களில் நடித்துள்ள நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். 

நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி தொடரில் முதல்முறையாக டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் டேனியல் பாலாஜி ஆனார். நடிகர் ஸ்ரீகாந்தின் ’ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமான டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, பிகில் போன்ற பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலாஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் டேனியல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory