» சினிமா » செய்திகள்

உத்தம வில்லன் விவகாரம் : கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

வெள்ளி 3, மே 2024 10:40:28 AM (IST)

நடிகர் கமல்ஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தம வில்லன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக ஏற்கனவே கூறியபடி, 30 கோடியில் மீண்டும் ஒரு படத்தை செய்து தருவதாக கமல்ஹாசன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் உத்தரவாதக் கடிதம் அளித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் அளித்த உத்திரவாதப்படி எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்று தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் உத்தரவாத கடிதம் அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இதுவரை தங்களுக்கு விருப்பமான கதையில் தயாரித்து நடித்துக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory