» சினிமா » செய்திகள்

விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது..? - வெங்கட்பிரபு பதில்

செவ்வாய் 5, மார்ச் 2024 12:26:00 PM (IST)விஜய் நடித்துள்ள 'கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த மாதத்துடன் நிறைவடையும் என்று இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் கேட்டு படக்குழுவினர்களை தொந்தரவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜே பேபி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' பட ரிலீஸ் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த மாதத்துடன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நிறைவடையும். அதன் பிறகு ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் மட்டும் உள்ளது. அதோடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். படத்தில் நிறைய சிஜி பணிகள் உள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸில் அதன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அவை எல்லாம் நிறைவடைந்தால்தான், படத்தின் அடுத்த அப்டேட்டையோ, பட வெளியீட்டையோ திட்டமிட முடியும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள், சரியான நேரத்தில் அப்டேட் வரும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory