» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனிக்கு ஓய்வு: கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு!

சனி 9, மார்ச் 2019 12:50:45 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் விளையாடுகிறார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸி., 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கேப்டன் கோலியின் சதமும் வீணானது. 

5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 4ஆவது ஒரு நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மொஹலியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரிஷப் பந்த் கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார். பேட்டிங்கிலும் அவர் திறமையை நிரூபித்தால் உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புண்டு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes

CSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory