» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலியிடம் இது போன்ற ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை: கவாஸ்கர் விமர்சனம்

வெள்ளி 26, ஏப்ரல் 2024 4:50:26 PM (IST)



விராட் கோலியிடம் இது போன்ற ஆட்டத்தை பெங்களூரு அணி எதிர்பார்க்கவில்லை என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். 

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்களையும், படிதார் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி முதல் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஆனால் அவர் அடுத்த 25 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த வகையில் 51 (43 பந்துகள்) ரன்களை 118 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே அடித்தார்.

இந்நிலையில் விராட் கோலியிடம் இது போன்ற ஆட்டத்தை பெங்களூரு அணி எதிர்பார்க்கவில்லை என்று நேரலையில் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது "விராட் கோலியிடமிருந்து சிங்கிள்கள் மட்டுமே வருகிறது. அடுத்ததாக தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் வருவதற்காக காத்திருக்கின்றனர். எனவே நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாட முயற்சிக்க வேண்டும். படிதாரை பாருங்கள். அவர் ஏற்கனவே ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்துள்ளார். அவரும் நினைத்திருந்தால் சிங்கிள் எடுத்திருக்கலாம்.

ஆனால் அங்கே வாய்ப்பு இருந்ததால் அவர் அதைத் தவற விடவில்லை. எனவே அடிப்பது எளிதில்லை என்றாலும் விராட் கோலி முயற்சித்திருக்க வேண்டும். நடுவில் அவர் பார்மை இழந்ததுபோல் தெரிந்தார். குறிப்பாக 31 - 32 ரன்களிலிருந்து அவுட்டாகும் வரை அவர் பவுண்டரிகளை அடிக்கவில்லை. எனவே நாளின் இறுதியில் நீங்கள் முதல் பந்திலேயே அவுட்டாவதையும் 14 - 15 ஓவர்கள் வரை விளையாடி 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாவதையும் உங்களுடைய அணி விரும்ப மாட்டார்கள்" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory