» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

வியாழன் 25, ஏப்ரல் 2024 11:45:49 AM (IST)



சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதராக தடகள வீரர் உசைன் போல்ட்டை ஐசிசி நியமித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்நிலையில், உலகில் மிக வேகமாக ஓடக்கூடிய நபரான ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் உலகக் கோப்பைக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 8 முறை தடகள போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த உசைன் போல்ட், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயிலின் நெருங்கிய நண்பர்.

இதுகுறித்து உசைன் போல் பேசியதாவது: "ஐசிசி டி20 உலகக் கோப்பையின் தூதராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கு கரீபியன் மண்ணில் இருந்து வந்தவன் என்பதால், கிரிக்கெட்டுக்கு என் இதயத்தில் எப்போதும் சிறப்பிடம் உண்டு.

உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இதுபோன்ற மதிப்புமிக்க போட்டியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory