» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை

ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)

நடிகர் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது புதிய அமைப்புகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத் தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து, பின்னர் உடல்நிலை மற்றும் அன்றைய கள நிலவரங்களைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதற்கிடையே தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், முதலமைச்சர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகத் தகவல்கள் பரவின. இதுகுறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களை நேரில் சந்தித்து, தனக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் இடையே எந்தவொரு பிரச்சினையோ அல்லது கருத்து வேறுபாடோ இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய அண்ணாமலை, புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக அறிவித்தார். அப்போது அரசியலில் தனக்கும் ரஜினிகாந்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பலர் அண்ணாமலை தொடங்கவுள்ள புதிய அமைப்பில் இணையப் போவதாகப் பரவலான செய்திகள் வெளியாகின. அதேபோல், நடிகர் ராகவா லாரன்ஸும் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தத் தொடர் அரசியல் நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத் தலைமை நிர்வாகி கோ.சம்பத்குமார் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சிக்கோ, புதிய அமைப்பிற்கோ அல்லது சங்கங்களுக்கோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory