» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் கடந்த சில நாட்களாகப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முதல் பொதுமக்கள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. வார இறுதி விடுமுறை நாள் என்பதால், வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து மெயின் அருவியில் குவிந்தனர்.

சேலம் கேஸ் கம்பெனி மோசிக்கனார் வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய பரிதாள் பீவி என்பவர் தனது குடும்பத்தினருடன் குற்றாலத்திற்குச் சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் அனைவரும் மெயின் அருவியின் பெண்கள் பகுதியில் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, பரிதாள் பீவிக்குத் திடீரெனக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருவிக்கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் 108 அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலமாகத் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்பாராத அவசரக் காலங்களில் உயிரைக் காக்கும் வகையில், அருவிக்கரைகளிலேயே தற்காலிக முதலுதவி சிகிச்சை மையங்களையும் போதிய மருத்துவ வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory